மத்திய அமைச்சரவையின் முடிவையடுத்து முக்கிய அரசு பிரமுகர்களின் கார்களில் இருந்த சிவப்பு சுழல் விளக்குகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்த சுழல் விளக்கை தானே அகற்றினார்.
அமைச்சர்களும் தங்கள் கார்களில் இருந்து சிவப்பு சுழல் விளக்குகளை மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி அகற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உட்பட நாடு முழுவதும் விஐபிக்கள் அனைவரின் வாகனங்களிலும் சிவப்பு சுழல் விளக்குகள் இடம்பெறாது என மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகளில் மட்டும் நீலநிற சுழல் விளக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்து சுழல் விளக்கை அகற்றினார்.