சென்னையில் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே 2.7 கிலோ மீட்டர், தேனாம்பேட்டை-சின்னமலை வரை 4.5 கிலோ மீட்டருக்கு புதியதாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் சமீபத்தில்தான் நிறைவடைந்தது.
இதனையடுத்து, நேரு பூங்கா-சென்ட்ரல் ரயில் நிலையம், சின்னமலை - டிஎம்எஸ் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை மே 25ம் தேதி தொடங்கப்படுகிறது. எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.