தமிழ்நாடு

மீட்புப் பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன் - முதல்வர் பழனிசாமி

மீட்புப் பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன் - முதல்வர் பழனிசாமி

webteam

நடுக்காட்டுப்பட்டியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு தெரிவித்தாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

திருச்சி மண்ப்பாறை அருகே சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தை தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை விழுந்தது. இந்தக் குழந்தையை மீட்கும் பணி 72 மணி நேரத்திற்கும் மேலாக நான்காவது நாளாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் பயன்படுத்தப்படாத போர்வெல்லில் விழுந்த குழந்தை சுஜித் வில்சனை காப்பாற்றுவதற்கான மீட்பு முயற்சிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் விளக்கம் அளித்தேன். மேலும் அங்கு நடக்கும் மீட்புப் பணிகளுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் உடன் மூன்று அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் அந்த இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளுக்காக பெரிய ரக ட்ரிலிங் இயந்திரம் மற்றும் சாதனங்கள் துறை வல்லுநர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை தவிர மீட்பு பணிகளுக்கு இன்னும் தேவைப்பட்டால் அதற்கான ஆயத்த பணிகளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.