ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் தயாராக உள்ளது. சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பபட்டுள்ளது. மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழக அரசு உயர் அதிகாரிகள் இதற்கான பணிகளை மேற்கொள்வர் என தெரிவித்துள்ளார்.