tn cm mk stalin on gautam adani PT
தமிழ்நாடு

“அதானி என்னைவந்து சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை” - சட்டசபையில் முதல்வர் பதில்

“அதானி என்னைவந்து சந்திக்கவும் இல்லை. நான் அவரைபார்க்கவும் இல்லை” - சட்டசபையில் முதல்வர் பதில்

PT WEB

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது. முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு முன் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அதானி குழுமம் சார்பில் மறுப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. இருந்தபோதும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புயலாக கிளப்பி வருகிறார்கள்.

gautam adani

இந்த விவகாரத்தில் அதிகம் அடிபட்ட ஆந்திர பிரதேசம் என்றாலும் தமிழ்நாட்டின் பெயரும் அடிபடவே செய்தது. பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். கவுதம் அதானி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்ததாகவும் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தநிலையில், அதானி விவகாரம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

முதல்வர் அளித்த விளக்கதில், “தமிழ்நாட்டில் அதானி குழுமத்தில் முதலீடு குறித்து பொதுவெளியில் வரும் தகவல் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே விளக்கி இருக்கிறார்.

அதானி என்னைவந்து சந்திக்கவும் இல்லை. நான் அவரைபார்க்கவும் இல்லை. இந்த விவகாரத்தை தலைவர்கள் அரசியல் ஆக்கி வருகிறார்கள். அதனால்தான் நான் இந்த விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சி சார்பாக வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையை பா.ம.க பா.ஜ.க ஆதரிக்க தயாராக இருக்கிறதா என்பதை விளக்க வேண்டும்” என்று