தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை செய்ய உள்ளார். காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பருவமழை பாதிப்புகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார்.
தொடர்புடைய செய்தி: சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து