தமிழ்நாடு

கட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவை ஆலோசனை

கட்டுக்குள் வராத கொரோனா பாதிப்பு: முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவை ஆலோசனை

Rasus

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.