தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நாளை கூடுகிறது

தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நாளை கூடுகிறது

webteam

தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை கூடுகிறது.

தலைமைச்செயலகத்தில் நாளை காலை 9 மணியளவில் கூடும் இந்த கூட்டத்தில் வறட்சி, விவசாயிகள் மரணம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருகும் பயிர்களால் மனம் நொந்து உயிர்விடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த விவகாரம் குறித்து கடந்த 2 நாட்களாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.