byelections x page
தமிழ்நாடு

#ByElectionResults | மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்.. தவெக - திமுக இடையே கடும் போட்டி!

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

Prakash J

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளிலும் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனை போட்டி நிலவியது. இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 85.99% , தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி,

Election

தாராபுரம் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் உள்ளார். 2ஆவது இடத்தில் திமுக உள்ளது.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு தற்போது வரை திமுக முன்னிலையில் உள்ளது. தவெக இரண்டாவது இடத்தில் உள்ளது.