தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில், தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை நடப்பு ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான பத்து அறிவிப்புகள் :
விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத்தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
சென்னையில் குடிசையில் மட்டும் சாலையில் வசிப்பவர்களுக்கு ரூ 38 ஆயிரம் கோடி செலவில் வீடுகள் கட்டித் தரப்படும்
வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ1031 கோடி நிதி ஒதுக்கீடு
கஜா புயல் பாதித்த பகுதிகளின் மேம்பாட்டுக்காக ரூ.2,361 கோடி நிதி ஒதுக்கீடு.
வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ.460.25 கோடி நிதி ஒதுக்கீடு.
ரூ.38 ஆயிரம் கோடி செலவில் 20 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கதொகை ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.