தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் மார்ச் 15-ல் தாக்கல்?

தமிழக பட்ஜெட் மார்ச் 15-ல் தாக்கல்?

Rasus

தமிழக பட்ஜெட் மார்ச் 15-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் மார்ச் 15-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.