தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் வரும் 23 ஆம் தேதி கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் நடக்க உள்ள முதல் பட்ஜெட் கூட்டம் இதுவாகும். நிதியமைச்சராக ஜெயக்குமார் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டம் பற்றி அமைச்சரவை கூடி 2 மணிநேரத்திற்கும் மேலாக கடந்த 3ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.