'தமிழகத்தை ஒருபோதும் பாஜக ஆட்சி செய்ய முடியாது' என்ற ராகுல் காந்தியின் பேச்சு பொருத்தமற்றது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, மத்திய `பாஜக அரசு, தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது’ என மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசியிருந்தார்.
ராகுல் காந்தியின் அந்த கூற்றுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டர் வழியாக பதிலளித்திருக்கிறார். தனது அப்பதிவில் அவர், “ராகுல் காந்தி வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். தமிழகத்தில் பாஜக-வால் ஆட்சி செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார். இத்தமிழ்நாட்டின் மகனாக, இதுகுறித்து ராகுல் காந்தி அவர்களுக்கு, இனி என்ன நடக்கப்போகிறது என சொல்லவிரும்புகிறேன்.
இவற்றின் விளைவு, தற்போது திமுக-வின் ஆக்சிஜன் சப்ளை-யுடன் ஐ.சி.யூ.-வில் இருக்கின்றீர்கள். புதுச்சேரியில் தற்போது நாங்கள் ஆட்சியிலும் இருக்கிறோம். பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதுவே எங்களின் மாபெரும் வெற்றிதான். அடுத்தது எங்களின் இலக்கு, தமிழகம்தான். தமிழக மக்கள் பாஜக மற்றும் பிரதமருடன் இருக்கின்றனர்.
வரலாற்றை மறக்காதீர்கள் சார். அதையே நீங்கள் மீண்டும் செய்தால், கண்டிக்கப்படுவீர்கள். அமேதியில் நடந்ததை போல.
அடுத்து ஒரு முறை நீங்கள் செயற்கையாக இப்படி ஒரு பிரச்னையை உருவாக்கி அதன் பின்னால் செல்லும்வரை, இப்போதைக்கு நன்றி”
என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்தி: நான் ஒரு தமிழன்” - ராகுல் காந்தி