அண்ணாமலை புதியதலைமுறை
தமிழ்நாடு

"ஆல்-பாஸ் பெருமையல்ல; ரத்து செய்ய இதுவே காரணம்" - அண்ணாமலை கொடுத்த விளக்கம்!

சென்னையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் சந்திப்பில், தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து பேசினார்.

Jayashree A

சென்னையில் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, ஆல்-பாஸ் முறை ரத்து ஏன் என்பது குறித்தும் தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் விளக்கினார்.

”ஆங்கிலம் மற்றும் கணக்கு போன்ற முக்கியப் பாடங்களில் தமிழ்நாட்டு மாணவர்களின் மதிப்பெண்ணானது மிகக்குறைவாக இருப்பதால், மாணவர்களின் நிலைக்குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு கட்டாயம் இருக்கிறது. 10ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்பது பெருமையல்ல... என்றாலும் இது 1980ல் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் செல்லவேண்டும் என்பது கட்டாயமாக இருந்ததால் இந்த சலுகையை வைத்து இருந்தனர். இப்பொழுது அனைத்து குழந்தைகளும் படிக்க வரும் பொழுது அவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவேண்டும். இந்த பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.” என்றார் இதைப்பற்றி தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்