Annamalai and Best ramasamy
Annamalai and Best ramasamy pt desk
தமிழ்நாடு

"கோவையில் பிரதமர் சந்திப்பு நிகழ்வை திமுக தடை விதிக்க நினைக்கிறது" - அண்ணாமலை

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பெஸ்ட் ராமசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியபோது..

"நாட்டின் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் மக்களை சந்திப்பது ஜனநாயகம். சாலை வழியாக மக்களை சந்தித்து மக்களின் ஆசி வாங்குவதற்காக பிரதமர் கோவை வருகிறார். பொதுமக்கள் அனைவருமே உற்சாகத்தோடு பங்கேற்பார்கள். நாலு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளோம். கோவையில் பிரதமர் சந்திப்பு நிகழ்வை திமுக தடை விதிக்க நினைக்கிறது. எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார்.

Modi

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை எடுக்க மாநில அரசு முற்றிலும் தவறிவிட்டது. வருகின்ற தேர்தலில் இது எதிரொலிக்கும். பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை புரிகிறார் அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருகையை குற்றம் சாட்டும் திமுக முதல்வரை தினமும் நகர்வலம் வரச் சொல்லலாமே. 24 மணி நேரமும் பிரதமர் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். எனவே பிரதமர் வருகையை தேர்தல் தேதியோடு ஒப்பிடுவது தோல்விக்கு எதிர்கட்சிகள் காரணத்தை இப்போதே தேடி விட்டதாக தெரிகிறது. பிரதமர் மக்களை தேடி வருகிறார் தற்போது அரசியல் மாறியுள்ளது.

பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள். ஆனால், புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனச் சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக் கொள்வர். ஆ.ராசா மீதான 2-ஜி வழக்கில் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வரலாம், அதன் பிறகு நான் சொன்னதை வைத்து முடிச்சு போடாதீர்கள்.

cm stalin

தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளுக்கும் மோடி வருகை தர வேண்டும் என்பது, எங்கள் விருப்பம் தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார். விரைவில் திருப்பூருக்கு மோடி வருகை புரிவார் என எதிர்பார்க்கிறோம். இந்தியா கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை. ஜெய் ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது" என்றார்.