அண்ணாமலை
அண்ணாமலை pt web
தமிழ்நாடு

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை? வைரலாகும் வீடியோ - ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரி

PT WEB

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆயிரத்து 749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவைகளில் ஆயிரத்து 85 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் கோவை மக்களவைத் தொகுதியும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரச்சாரத்திற்கு சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு பணம் கொடுப்பதுபோன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், வீடியோவின் உண்மை நிலை குறித்தான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்து இருந்தார்.

பின்னர், அந்த video பழையது தான் என்று தேர்தல் அதிகாரி விளக்கமும் அளித்தார்.

இதற்கு முன் தேனியில் அதிமுக நிர்வாகி, பெண்களுக்கு பணம் கொடுத்த வீடியோ வெளியானது. முன்னதான திமுக நிர்வாகியும் பெண்களுக்கு பணம்கொடுக்கும் வீடியோ வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி பரப்புரையின் போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுக்க முயன்ற வேட்பாளரை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறிய வீடியோவும் வைரல் ஆனது.