அண்ணாமலை புதியதலைமுறை
தமிழ்நாடு

”மக்களின் கோபத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள்” - ஆளுநரை விமர்ச்சித்த திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்

ஆளுநரின் செயற்பாட்டை கண்டித்து திமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

PT WEB

ஆளுநரை விமர்ச்சித்த திமுகவிற்கு கண்டனத்தை தெரிவித்த அண்ணாமலை!

2025-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடியதாகவும் தேசியகீதம் பாடப்படவில்லை என்றும் கூறீ ஆளுநர் ரவி பேரவையிலிருந்து வெளியேறினார். இதுதொடர்பாக தமிழக அரசு, முதல்வர் மற்றும் திமுக சார்பில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டன. அதேபோல், ஆளுநர் மாளிகை தரப்பிலும் விளக்கமும் மீண்டும் தேசிய கீதம் குறித்த நிலைப்பாடும் தெளிவுபடுத்தி அறிக்கை வெளியானது.

இதனிடையே ஆளுநரின் செயற்பாட்டை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில், மக்களின் கோபத்தை திசை திருப்ப திமுக முயற்சிப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அவர் அறிக்கையில் வெளியிட்டுள்ள விவரங்களை இந்த வீடியோ காணொளியில் காணலாம்.