தமிழ்நாடு

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை : திமுக வெளிநடப்பு

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை : திமுக வெளிநடப்பு

webteam

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

2019ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் காலை 10 மணிக்கு ஆளுநர் ‌பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டம் தொடங்கியது. தமிழில் பேசிய தனது உரையை தொடங்கிய ஆளுநர், அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார். அத்துடன் எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும் என்றார். மேலும் இதுவே தனது செய்தி என்றும் அவர் கூறினார். ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். இதைத்தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தற்போது நடைபெறும் அதிமுக அரசு அனைத்திலும் தோல்வியடைந்துள்ளதாக கூறினார். கஜா புயால் நிவாரணத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்றார். ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக அரசு சொல்கிறது. ஆனால் பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவிட்டுள்ளது. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. 

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தை செலுத்திய மோசமான நிலையில் அரசு உள்ளது. உயர்மின் அழுத்த கோபுரங்கள் தொடர்பாக போராடும் விவசாயிகள் மற்றும் மக்களை அழைத்து பேசமுடியாத அரசு இது உள்ளது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். முதலமைச்சராக இருந்தாலும், துணை முதலமைச்சராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகமே குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.