நடிகர் ஜெய் அடையாறு வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி தனது மனைவி குஷ்பூ மற்றும் மகளுடன் மந்தைவெளியில் வாக்களித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான ஆர் ஜே பாலாஜி கோட்டூர்புரத்தில் வாக்களித்தார்.
நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் புதுத்தாமரைபட்டியில் வாக்கை பதிவு செய்தார்.
தேனாம்பேட்டையில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து வாக்களித்தார் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன்.
மதுரை அண்ணாநகரில் வாக்களித்த இயக்குநர் அமீர்.
நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார். வாக்களித்துவிட்டு செல்லும் போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினி `ஓட்டுரிமை இருக்கும் எல்லோரும் ஓட்டு போடணும்' என்று கூறினார்.
என்னுடைய ஜனநாயக கடமையை நான் செய்துவிட்டு வந்திருக்கிறேன். மற்றவர்களும் அதை செய்ய வேண்டும் என நம்புகிறேன். மாற்றம் வந்து கொண்டே இருக்கும். உங்கள் வாழ்க்கை மாறும்.
ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை பதிவு செய்த இயக்குநர் அட்லீ
சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் தமிழக முதல்வரும் சென்னை கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மகனுடன் வாக்கு செலுத்தினார்.
இயக்குநர் பா.இரஞ்சித் தனது ஊரான கரலப்பாக்கத்தில் வாக்கு செலுத்தினார்.
திருச்சியில் உள்ள தில்லைநகர் வி.வி.பேட் இயந்திரம் பழுதானதால் அமைச்சர் கே.என்.நேரு வாக்களிக்காமல் காத்திருந்தார். 45 நிமிடத்திற்குப் பிறகு அவர் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். வாக்கு செலுத்தியபின் பேட்டியளித்த அவர், “தேர்தலில் ஒரு சவாலும் இல்லை. எப்போதும்போல்தான் இருக்கிறது. அனைத்தும் சரியாகத்தான் இருக்கிறது. மக்களுடைய ஆதரவு தளபதிக்கு இருக்கிறது. நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறாக வருகிறது எனச் சொன்னதையடுத்து சுத்தமாக மாற்றிவிட்டு புது இயந்திரம் மாற்றியுள்ளனர்” என்றார்.
தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.
TVK தலைவர் விஜய், வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படாததால், வாக்காளர்களால் தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இயலவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அவர், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் திட்டமிடல் குறைபாடுடையதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெசன்ட் நகரில் வாக்களித்த நடிகர் விக்ரம்.
"தமிழ்நாடு தற்போது தலைவிரித்தாடும் ஊழல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் முனிவர்கள் வாழ்ந்த பூமியாகத் திகழ்ந்த இது, இப்போது ஒரு கலாசார அடையாள நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வளர்ச்சியையும் கலாசார முன்னேற்றத்தையும் ஒருங்கே உறுதி செய்யும் ஓர் அரசாங்கத்தைத் தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். உங்கள் வாக்கைச் செலுத்துங்கள்; மற்றவர்களும் அவ்வாறே செய்யுமாறு ஊக்கப்படுத்துங்கள்".
ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் தனுஷ்
கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழகத்தில் அனைவரும் காலைமுதலே ஜனநாயகக் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். வாக்குச் சாவடிகளில் நமது தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர். எல்லோரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மதியம் வெயில் அதிகமாக இருந்தாலும்கூட பெரியவர்கள் குடையுடன் வந்து வாக்கு செலுத்துங்கள். வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் யாரும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். நமது ஜனநாயகக் கடமையைச் செய்ய வேண்டும். தமிழகத்தில் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் வரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்றார்.
ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இப்போது உடனடியாக மதுரைக்கு கிளம்புகிறேன். ஒரு வேட்பாளராக என்னுடைய தொகுதி மக்களை சந்திக்கிறேன். பிரச்சாரத்தின் போது உண்மையை சொன்னேன். மதுரை மத்திய தொகுதியை பார்த்தாலே அங்கிருக்கும் பிரச்சனைகள் நமக்கு தெரியும். அதைத்தான் நான் சொன்னேன், அரசாங்கம் செய்ய தவறியதை, செய்ய வேண்டியதை சொன்னேன். அதில் உண்மை இருந்ததால் மக்களுக்கு என் கருத்து போய் சேர்ந்திருக்கிறது.
அணைக்கட்டு தொகுதியில் வாக்களித்த இயக்குநர் ஹெச்.வினோத்.
காலையில் முதல் நபராக வந்து வாக்களித்தார் அஜித். இந்நிலையில் அவர் வாக்களித்துவிட்டு செல்லும் போது செய்தியாளர்கள் மாற்றம் வருமா? எனக் கேட்டதாகவும், அதற்கு அஜித் NO NEED எனக் கூறியதாகவும் தகவல் பரவியது. தற்போது இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா "மாற்றம் தேவையில்லை என நடிகர் அஜித் கூறவில்லை, NO NEED என அஜித் கூறியதாக பரவிய தகவல் தவறானது. தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பதிலளித்துள்ளார்.
தவெக பொதுச் செயலாளரும் சென்னை தி.நகர் வேட்பாளருமான என்.ஆனந்த், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். பின்னர், பேசிய அவர், ”வெற்றி நிச்சயம்; தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதிதான் நிச்சயம் முதல்வராக வருவார். எந்த சந்தேகமும் இல்லை. எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாற்றத்தை தலைவர் தளபதிக்கு தர இருக்கிறார்கள்” என்றார்.
நான் எனது ஜனநாயக கடமையை செய்துவிட்டேன். எல்லோரும் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு மேல் எதுவும் சொல்லக்கூடாது இது ரகசிய வாக்கெடுப்பு. ஆனால் என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால் அது ரகசியம் இல்லை.
என்னுடைய வேண்டுகோள் என்ன என்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்கள் ஆகியது போதும். தன் குடும்பத்துடன் கோடி கோடியாக சொத்துக்களை குவிக்காமல், கடைக்கோடி மனிதனின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும்.
கீழ்ப்பாக்கத்தில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி
“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்! தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்”.
தி.நகரில் தனது வாக்கை செலுத்தினார் இசையமைப்பாளர் இளையராஜா
ஆழ்வார்பேட்டையில் தனது அம்மாவுடன் வந்து வாக்களித்த நடிகை த்ரிஷா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிர்வாகியுமான ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். அவருடன் அவரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அனைத்து மக்களும் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 வருடங்கள் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கியுள்ளார். அனைத்து மக்களும் மீண்டும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் வருவார் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்.
மாநில பாஜக தலைவர் மற்றும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார்.
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது மனைவி ப்ரீத்தி நாராயணனுடன் இணைந்து வாக்கு செலுத்தினார்.
பின்னர் ANI-யிடம் பேசிய அஸ்வின், "தமிழகத்தில் நடைபெறும் மிக முக்கியமான தேர்தல் இது என்று நான் கருதுகிறேன். நான் இங்கு வந்து எனது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற விரும்பினேன். நான் எனது கடமையைச் செய்துவிட்டேன்; இப்போது அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமிழகத்தின் முகத்தையே மாற்றி அமைப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி, 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன.
"தேர்தல் களம் மிகவும் சூடாக இருக்கிறது; வெயிலும் அதிகமாக இருக்கிறது; முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்".
மடிப்பாக்கத்தில் இயக்குநரும் மற்றும் நடிகருமான பிரதிப் ரங்கநாதன் வாக்களித்தார்.
வாக்களித்த பின் பேசிய சசிகலா, “எனது ஜனநாயக கடமையைச் செலுத்தியிருக்கிறேன். தமிழக மக்களும் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என்றார்.
சேலம் அரிசிப்பாளையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, 139-ஆவது எண் வாக்குச்சாவடிக்குள் அதிமுக மற்றும் திமுக கட்சி முகவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்குள் அதிமுகவைச் சேர்ந்த எம். கந்தசாமியும், திமுகவைச் சேர்ந்த சி. செந்திலும் பேசிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஜனங்க நன்றாக இருப்பது லட்சியம், ஜனநாயகம் நன்றாக இருப்பது லட்சியம். அதற்கு வாக்கு அளிக்க கூட வராமல் யாரும் பண்ணைக் கூடாது அலட்சியம். இன்றைக்கு வாக்களிக்க வரும் இளைய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புவது உங்களுக்கு எதனை வேலை இருந்தாலும் சரி அதனை ஒதுக்கு வைத்துவிட்டு வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும். இங்கு நான் வந்ததில் ஒரு விஷயம் புரிந்து கொண்டேன். ஏதோ இந்த ஓட்டு பிரிகிறது, யாருக்கோ எதோ ஒன்று சரிகிறது, மக்கள் மனதில் ஏதோ ஒரு விஷயம் பத்தி எரிகிறது. இந்த தேர்தலை அப்படித்தான் பார்க்கிறேன். இங்கு ஓட்டுப்போட வந்தவர்களில் சிலர் தான் இளைஞர்களாக இருக்கிறார்கள். நிறைய வயது முதிர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இன்று ஓட்டுக்கு பணம் வாங்காமல் யார் ஒட்டு போடுகிறார்களோ அவர்கள் தான் ஜனநாயகத்தை காப்பவர்கள்.
தியாகராய நகரில் சூர்யா - ஜோதிகா தம்பதி தங்களது வாக்கை செலுத்தினர்.
அடையாறில் நடிகர் கவின் தனது வாக்கை செலுத்தினார்.
யார் மிகவும் தகுதியானவரோ அவர் வெல்வார்கள். ஜெயிப்பவர் கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இந்தியத் தேர்தல் ஆணையச் செயலகம் வெளியிட்ட தற்காலிகப் புள்ளிவிவரங்களின்படி, சென்னையில் மிதமான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. நகரின் 16 தொகுதிகளிலும் காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு சதவீதம் சுமார் 31% முதல் 39% வரை இருந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காலை 9 - 11 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுச் சதவீதம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்தது; இது 15 - 35 சதவீத அளவை எட்டியதுடன், சில தொகுதிகளில் 40 சதவீதத்தை நெருங்கும் அளவிற்கும் உயர்ந்தது. விருகம்பாக்கம் மற்றும் தியாகராய நகர் தொகுதிகள் முறையே 39.27% மற்றும் 39.08% வாக்குப்பதிவுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்தன. அதேவேளையில், மத்திய மற்றும் வட சென்னை பகுதிகளைச் சேர்ந்த சில தொகுதிகள், பின்தங்கியிருந்தன. விருகம்பாக்கம் (39.27%) மற்றும் தியாகராய நகர் (39.08%) ஆகிய தொகுதிகளை அடுத்து, வேளச்சேரி (37.18%), கொளத்தூர் (37.06%), அண்ணா நகர் (36.70%), வில்லிவாக்கம் (36.92%) மற்றும் பெரம்பூர் (36.26%) ஆகிய தொகுதிகள் இருந்தன; இவை அனைத்தும் 30 சதவீதத்தின் உயர் வரம்பில் இருந்தது. திரு.வி.க. நகர் (31.37%), ராயபுரம் (31.71%) மற்றும் மயிலாப்பூர் (31.47%) ஆகிய தொகுதிகள் 30 சதவீத அளவை விடச் சற்று அதிகமாகப் பதிவாகியிருந்தன.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஓட்டுப் பதிவிற்கு முன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கோயிலில் கொடுத்த பூவை கையில் சுற்றிக் கொண்டு அன்னையின் ஆசீர்வாதத்துடன் ஓட்டு போட வந்தது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஈஞ்சம்பாக்கத்தில் மகள் அதிதியுடன் வந்து வாக்களித்த இயக்குநர் ஷங்கர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் தங்களது கட்சி சின்னங்கள் மற்றும் கொடிகளுடன் திரண்டனர். அப்போது வாக்காளர்களை ஈர்ப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தவெக நகரச் செயலர் ஷேக் அஸ்லாமை காவல் துறை கைது செய்தது. மேலும், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் சக்திவேல் என்பவரை காவல் துறை கைது செய்தது.
தமிழகத்தில் நண்பகல் 1 மணி நிலவரப்படி, 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 3,25,76,724 பேர் வாக்களித்துள்ளனர். இன்னும் 2,47,66,568 பேர் மீதம் உள்ளனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மொத்தமாக 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 5,73,43,292 வாக்காளர்கள் உள்ளனர்.
நீலாங்கரையில் வாக்களித்த நடிகை கீர்த்தி சுரேஷ்
இன்று என்ன வேலை இருந்தாலும், அவற்றை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு தயவு செய்து வந்து ஓட்டு போடுங்கள். ஓட்டு போடுவதற்காக ஊருக்கு சென்றிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். இது முக்கியமான வேலை. யாரை பிடித்திருக்கிறதோ, யார் இருக்க வேண்டுமோ அவரை தேர்ந்தெடுக்க நமக்கு இருக்கும் முக்கியமான வாய்ப்பு இது. தயவு செய்து வந்து வாக்களியுங்கள்.
தியாகராய நகரில் வாக்களித்த நடிகர், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்
எத்தனை முனை போட்டி இருந்தாலும் யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என மக்கள் தீர்மானிப்பார்கள். ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. எது வேண்டும், எது வேண்டாம் என்ற தீர்க்கமான முடிவுடன் செயல்பட வேண்டிய நேரம் இது. வாக்கு என்பது விளையாட்டான விஷயம் கிடையாது.அறிவை பயன்படுத்தி, நம்முடைய தலைமுறையை, சித்தாந்தத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டிய வாழ்வின் முக்கியமான நேரமாக இதை பார்க்கிறேன்.
வாக்குப் பதிவு செய்த பிறகு சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் நடிகை சிம்ரன், “யதார்த்தத்தின் மீது நாம் கவனம் செலுத்துவோம், டிராமாவை தவிர்ப்போம்; இது வாக்குச் செலுத்தும் இடம், சினிமா சூட் இல்லை; வாக்களிக்கும் தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றுதான். வாக்கு செலுத்துவது நம் உரிமை மட்டுமல்ல, நம்முடைய பொறுப்பும்” என பதிவிட்டுள்ளார்.
நண்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 70% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேதலில் 3 மணி நிலவரப்படி 53% மட்டுமே பதிவாகியிருக்கும் நிலையில், 2026 தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி வருகிறது.
இந்த தேர்தல் மிகவும் உற்சாகமான தேர்தல். யாருக்கு ஊட்டு என பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்தது. நம் ஊரில் மட்டுமல்ல, வெளிநாட்டில் கூட இருந்து கிளம்பி வருகிறார்கள். நிறைய பேருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. வாக்கு சதவீதம் நன்றாக இருக்கிறது என கேள்விப்படும்போது சந்தோஷமாக இருக்கிறது. அனைவரும் வந்து வாக்களியுங்கள். உங்களுக்கு யார் மேல் நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு ஒட்டு போடுங்கள்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர், நாமக்கல்லில் அதிகபட்சமாக 76% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தியாகராய நகரில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் சிம்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது "எல்லோரையும் வாக்களிக்க சொல்லி பதிவிட நினைத்தேன். ஆனால் எல்லோரும் தன்னெழுச்சியாக வந்து வாக்களிப்பதை பார்க்கையில் இது ஒரு வித்தியாசமான தேர்தல் என தோன்றுகிறது. மாற்றம் வருவது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். நான் ஒரு நடிகன், எல்லா கட்சியிலும் எனக்கு ரசிகர்கள் உண்டு. எனவே ஒருதலை பட்சமாக என்னால் பேச முடியாது. மே 4 என்ன நடக்கிறது என பார்க்கலாம்." என்றார்.
சாலிகிராமத்தில் வாக்களித்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் பேசிய போது "எல்லோரும் அவரவரின் வாக்கை பதிவு செய்யவேண்டும். சிரமம் பார்க்காமல் 6 மணிக்குள் எல்லோரும் வந்து ஓட்டு போடுங்கள். வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்க வந்தவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
அண்ணாநகரில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் நடிகர் விஷால்
ஏப்ரல் 23 என்பது தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி இருக்கப்போகிறது என்பதை தீர்மானிக்கும் நாள். நான் என்துய கடமையை செய்துவிட்டேன். 3 மணிக்குள்ளாகவே 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றால் பெரிய விஷயம். எல்லோரிடமும் நான் கேட்பது என்ன என்றால் தயவு செய்து வாக்களிக்க வாருங்கள்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தனது வாக்கை பதிவுசெய்தார் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
வாக்களித்ததற்கு பின் பேசிய நடிகர் சிலம்பரசன், மாற்றம் வரணுமா வேண்டாமா என்பது பற்றி நாம் முடிவு பண்ண முடியாது; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் நடிகனா இருக்கேன்; எனக்கு எல்லா கட்சியிலும் ஃபேன்ஸ் இருப்பாங்க; ஒரு சார்பாக நான் எதுவும் சொல்ல முடியாது; அவங்க அவங்களுக்கு யார புடிக்குமோ அவங்களுக்கு ஓட்டு போடப் போறாங்க என பேசினார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாதவகையில் 80%-க்கு மேல் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011 தேர்தலில் அதிகபட்சமாக 78.2% வாக்குப் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2026 தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாதவகையில் 80%-க்கு மேல் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி 84.29% வாக்குப்பதிவாகியுள்ளது, சில வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கப்பட்டு இன்னும் வாக்குப்பதிவு தொடர்கிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைப்பு. வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகளின் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன!