TN election x page
தமிழ்நாடு

தமிழகத் தேர்தல் | 4,618 வேட்பாளர்கள் போட்டி.. அதிகம் எங்கு தெரியுமா? இறுதிப் பட்டியல் வெளியீடு!

2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

PT WEB

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலில் 234 தொகுதிகளில் மொத்தம் 4,618 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலில் 234 தொகுதிகளில் மொத்தம் 4,618 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

மொத்தமாக 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 2,460 வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. 521 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.