வேளாண் பட்ஜெட் தாக்கல் முகநூல்
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கியுள்ளார் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் .

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தவகையில், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கியுள்ளார் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் . இதில், வேளாண் துறையுடன் கால்நடைத்துறை , மீன்வளத்துறைக்கான நிதி ஒதுக்கீடூகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

விவசாயிகளைப் பற்றி புகழ்ந்துரைக்கும் திருக்குறள், புறநானூறு பாடல்களைக் கூறி தனது உரையைத் தொடங்கினார். முதலில்,

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்

என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது, பல்வேறு அரசுகளை, தமது குடை நிழலின் கீழ் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள் உழவர்கள் என்று திருவள்ளுவர் புகழ்ந்துரைத்துள்ளார். உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் அனைத்து மக்களையும் பாதுகாப்பார்கள் என்பது புறநாநூறு கூறும் சொல் என்று கூறி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.

வேளாண் பட்ஜெட் என்பதால், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் எம் எல்ஏக்கள் அனைவரும் பச்சைத்துண்டு அணிந்துள்ளனர். கூடுதலாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் நிகழ்வு மொத்தம் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது பட்ஜெட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பொது இடங்களில் எல்இடி திரைகள் மூலம் காலை 9.30 மணி முதல் வேளாண் பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை விவசாயிகளை எதிர்பார்த்துள்ளனர். அதன் ஒருபகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள், ஆந்திராவைப் போன்று தமிழகத்தில் ஒரு டன் மாங்கனிக்கு 25 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது