செய்தியாளர்: சந்தான குமார்
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜனா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.
அமமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கூறும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக முஸ்தபா தெரிவித்தார்.