TKS.Elangovan
TKS.Elangovan pt desk
தமிழ்நாடு

“மக்களிடம் பணத்தை பெற்று பணக்காரர்களுக்கு கொடுப்பதுதான் குஜராத் மாடல்”- டி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்!

webteam

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மயிலாடுதுறை திமுக கிழக்கு ஒன்றியம் சார்பாக திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முருகுமணி தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “நாட்டினுடைய சொத்தை எல்லாம் பணக்காரர்கள் சுருட்டி கருப்பு பணமாக வைத்துள்ளனர். அந்த சொத்தை எல்லாம் அவர்களிடம் இருந்து மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் பணம் தருவதாக குஜராத் மாடல் ஆட்சி நடத்தும் மத்திய அரசு கூறியது. வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறினார்கள்.

PM Modi

ஆனால், 20 பணக்காரர்கள் வங்கியில் வாங்கிய இரண்டு லட்சம் கோடி ரூபாய் பணத்தை கட்டாமல் உள்ளனர். அந்த 20 பணக்காரர்களின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இன்னொருபக்கம் கல்விக் கடன், விவசாயிகள் பெற்ற கடனை வங்கிகள் திருப்பிச் செலுத்த கூறுகிறது.

பணக்காரர்களிடம் இருந்து கருப்பு பணத்தை பிடுங்கி மக்களுக்கு கொடுப்பதாக கூறிவிட்டு, மக்களிடமிருந்து பணத்தை பெற்று பணக்காரர்களுக்கு கொடுப்பதுதான் தான் மோடியின் குஜராத் மாடல் ஆட்சியாக உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி.
டி.கே.எஸ் இளங்கோவன்

பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் குஜராத் மாடல் ஆட்சியை பற்றி சொல்லி தான், ராகுல் காந்தி மாட்டிக் கொண்டார்.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்டத்தை கூட மோடி அரசு நிறைவேற்றவில்லை. அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து ஏழை, எளிய மக்களளை பற்றி கவலைப்படாமல் பணக்காரர்களுக்காக வேலை (மிகக்கடுமையான வார்த்தைகளுடன்) செய்யும் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.

public meeting

எந்தவொரு பொருளுக்கும் பொதுவாக யார் உற்பத்தியாளரோ அவரே விலையை நிர்ணயிப்பார். ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு மட்டும், வாங்குபவர் விலையை நிர்ணயிக்கின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் விவசாயிகள் 20 சதவீதம் உற்பத்தி செய்கின்றனர்.

உற்பத்தி செய்த பொருளுக்கு விலையை நிர்ணயிக்க, பொருளை வாங்குபவர்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிற நிலை உள்ளது. இதனை மாற்றுவதற்கு திட்டம் தீட்ட வேண்டும். அதற்காக தான் கலைஞரால் திட்டமிடப்பட்டு விவசாயிகளின் நலன் காக்க உழவர் சந்தை கொண்டுவரப்பட்டது” என்றார்.