தமிழ்நாடு

திமுக செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம்

திமுக செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம்

webteam

திமுக செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக செய்தித் தொடர்பு செயலாளராக இருந்தவர் டி.கே.எஸ். இளங்கோவன். இவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி, அந்தப் பொறுப்பில் இருந்து திமுக தலைமை நீக்கியது. பதவி நீக்கத்திற்கான காரணத்தை திமுக தலைமை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

இந்நிலையில் அவரை மீண்டும் அந்த பதவியில் நியமித்து திமுக அறிவித்துள்ளது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதைத் தெரிவித்துள்ளார்.