திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் திருக்கோயிலில் பெண்கள் ஏற்றிய நெய் தீபத்தில் அர்ச்சகர் தண்ணீர் ஊற்றி அணைத்ததால் பரபரப்பு
திருவொற்றியூரில், வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஞான சக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள் புரிகிறார்.
மேலும், நாள் தோறும், உச்சிக் காலை பூஜையின் போது, சிவப்பு நிற சேலை உடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப் படைக்க, பக்தர்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற அருள் புரிகிறார். பூலோகத்தில், முதன்முறையாக இத்திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால், இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான், ஆதிபுரிஸ்வரர் (சிவபெருமானின் முதல் வடிவம்) என அழைக்கப்படுகிறார்.
தோற்றத்தில், மூலவர் திருவாரூர் தியாகேசரை ஒத்திருப்பதால், தியாகராஜ சுவாமி என அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலில் தினமும் தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திரை துறையை செய்த பிரபலங்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வடிவுடையம்மன் கோயிலில் முருகன் சன்னதியில் பெண் பக்தர்கள் சாமிக்கு நேற்றிக் கடனாக நெய் விளக்கு ஏற்றி வைத்தனர்.
இதில் திடீரென யாரும் எதிர்பாராத போது பாஸ்கர் என்ற அர்ச்சகர் பெண்கள் ஏற்றிய நீதிபதில் தண்ணீரை ஊற்றி அணைத்தார். இதை சற்றும் எதிர்பாராத பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பெண் பக்தர்கள் அர்ச்சகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் அர்ச்சகர் மீது அறநிலையத்துறை அமைச்சர், அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரி சமூக வலைதளங்களில் பக்தர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.