திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை பெய்துள்ளது. இதில், சேங்காளிபுரம் பகுதியில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த அலமேலு (70) என்பவர் மீது நேற்று நள்ளிரவில் சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
அதேபோல் கொரடாச்சேரி தாலுகா கண்கொடுத்தவனிதம் பகுதியைச் சேர்ந்த கணபதி (80) என்பவர் தனது மனைவி இந்திராணியுன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தர். அப்போது மழையில் ஊறியிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் கணபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்திராணி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து குடவாசல் மற்றும் கொரடாச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்