பிச்சைக்காரருக்கு வாழ்வளித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காரை நிறுத்திவிட்டு இறங்கி அவர் அருகில் சென்று அந்த முதியவரைப் பார்த்து சாப்பிட்டீர்களா? ஏன் இவ்வாறு பிச்சை எடுக்கிறார்கள்? உங்களுக்கு குடும்பம் இல்லையா? பிள்ளைகள் இல்லையா? என்று விசாரித்தார்.
அதற்கு அவர் தன் பெயர் கோவிந்தசாமி, கீழ் சிறுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தனக்கு யாரும் இல்லை, தான் ஒரு அனாதை என்றும் சொல்லியுள்ளார். அதனையடுத்து, அரசு நடத்திவரும் முதியோர் இல்லத்தில் அவரை சேர்ப்பதாகவும் மூன்று வேளையும் உணவு அளிப்பதுடன் மாதம் ஆயிரம் ரூபாய் முதியோர் உதவித்தொகை கொடுப்பதாகவும் அவருக்கு ஆட்சியர் ஆறுதல் கூறியுள்ளார்.
இதற்கு அந்த முதியவர் ஒத்துக்கொண்டதால், ஆட்சியர் அந்த முதியவரை அரசு அதிகார்களிடம் ஒப்படைத்தார். மலப்பாம்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் வைத்து பராமரிக்கவும் அவர் உத்தரவிட்டார். உதவி என்று கேட்காமலேயே வலிய சென்று பிச்சைகாரருக்கு உதவிய மாவட்ட ஆட்சியரின் இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.