நடிகை ஆண்ட்ரியா pt desk
தமிழ்நாடு

மகாசிவராத்திரி | திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார்.

PT WEB

செய்தியாளர்: அ. மணிகண்டன்

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திரைப்பட நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார்.

மகா சிவராத்திரி உருவான தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிவராத்திரி தினத்தை ஒட்டி திரைப்பட நடிகை சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து சம்மந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் உள்ள விநாயகரை வணங்கி தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார், இதையடுத்து பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்,