நடிகர் ரக்சன் pt desk
தமிழ்நாடு

தி.மலை | அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரக்சன் தனது நண்பர்களுடன் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தொடர்ந்து படையெடுக்கும் திரையுலக பிரபலங்கள்... வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த நடிகர் ரக்சன் தனது நண்பர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

PT WEB

செய்தியாளர்: மா.மகேஷ்

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு கடந்த சில தினங்களாகவே திரைப்பட நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்கள் இசையமைப்பாளர்கள் என பலரும் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி நடித்து வெளியான வேட்டையன் மற்றும் துல்கர் சல்மான் திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரக்சன் இன்று தனது நண்பர்களுடன் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தந்தார்.

முன்னதாக திருக்கோவில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். தொடர்ந்து திருக்கோயில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.