திருவண்ணாமலை
திருவண்ணாமலை pt web
தமிழ்நாடு

தி.மலை: மகாதீபத்தை காண இலவச அனுமதி சீட்; 10ஆயிரம் பேர் குவிந்ததால் நெரிசலில் சிக்கி 3பெண்கள் மயக்கம்

Angeshwar G

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேறுவதற்கான இலவச அனுமதிச்சீட்டை பெற, அரசு கலைக்கல்லூரியில் ஏராளமானோர் குவிந்தனர். நெரிசலில் சிக்கி 3 பெண்கள் மயக்கமடைந்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்தைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தை மலை மீது ஏறிச் சென்று தரிசிக்க 2 ஆயிரத்து 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் இலவச அனுமதிச்சீட்டை பெற 10 ஆயிரம் பேர் குவிந்தனர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். இதனால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நெரிசலில் சிக்கி 3 பெண்கள் மயக்கமடைந்த நிலையில், கூட்டத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண கிட்டத்தட்ட 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.