தமிழ்நாடு

திருவள்ளூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல்

kaleelrahman

சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 3லட்சம் மதிப்பிலான 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சிவந்தி ஆதித்தன் நகரில் உள்ள வீடு ஒன்றில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சோழவரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்று காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ. 3லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த சிராஜூதீன், ஜெயமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த சோழவரம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.