தமிழ்நாடு

திருவள்ளூர்: வாக்கு எண்ணும் மையத்திற்கு வாகனத்தில் வந்த வைஃபை கருவிகளால் பரபரப்பு

திருவள்ளூர்: வாக்கு எண்ணும் மையத்திற்கு வாகனத்தில் வந்த வைஃபை கருவிகளால் பரபரப்பு

kaleelrahman

திருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வாகனத்தில் கொண்டு வந்த வைஃபை கருவியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும், திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி முகவர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணும் மையத்திற்கு சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி திமுகவினர் சோதனை மேற்கொண்டனர். அதில் 11 வைஃபை ரூட்டர் கருவிகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது தவறுதலாக கருவி கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த திமுக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேப்பம்பட்டு தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்கெனவே அடையாளம் தெரியாத வாகனம், ஆன்லைன் வகுப்பு போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்றைய தினம் வாகனத்தில் கொண்டு வந்த வைஃபை கருவியால் பரபரப்பு ஏற்பட்டது.