தமிழ்நாடு

போலீசார் அறைந்ததில் காது கேட்கவில்லை: பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

போலீசார் அறைந்ததில் காது கேட்கவில்லை: பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

Rasus

போலீசார் தன்னை தாக்கியதில் தன் காது கேட்கவில்லை எனவும், தன்னை தாக்கிய காவல்துறை அதிகாரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் ஈஸ்வரி வலியுறுத்தி உள்ளார்.

திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் மீதும் காவல்துறை அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அப்போது பெண் ஒருவரை போலீசார் கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பல்வேறு அரசியல் தலைவர்களும், நெட்டிசன்களும் இந்த சம்பவத்திற்கும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், முதலில் காலில் கம்பால் அடித்தார்கள். அதனை தடுக்க முயன்றபோது கன்னத்தில் அறைந்தார். இதனால் காது கேட்கவில்லை. மருத்துவமனைக்கு சென்றேன். ஸ்கேன் எடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார். என்னைத் தாக்கிய காவல் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.