தமிழ்நாடு

திருப்பூர்: மர்மமான முறையில் உயிரிழந்த 80க்கும் மேற்பட்ட ஆடுகள்!

திருப்பூர்: மர்மமான முறையில் உயிரிழந்த 80க்கும் மேற்பட்ட ஆடுகள்!

kaleelrahman

உடுமலை அருகே ஒரே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 80-க்கும் மேற்பட்ட ஆடுகள் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரன்பட்டி, இந்திரா நகர், முத்து நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மர்ம விலங்கு ஆடுகளை கொன்று வந்த நிலையில், மின் நகர் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் ஆட்டுப் பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்ததில் அவை பரிதாபமாக உயிரிழந்தன.

மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு போராடி வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இதையடுத்து உயிருக்கு போராடி வரும் ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.