தமிழ்நாடு

திருப்பூர்: தலைமைச் செயலாளர் படத்துடன் திமுக பிரமுகர் ஒட்டியுள்ள போஸ்டர்

திருப்பூர்: தலைமைச் செயலாளர் படத்துடன் திமுக பிரமுகர் ஒட்டியுள்ள போஸ்டர்

kaleelrahman

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளில் திமுக பிரமுகர் ஒட்டியுள்ள போஸ்டரில், அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு படம் இடம் பெற்றுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், அவருக்கு உறுதுணையாக இருக்கும் தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தி.மு.க பிரமுகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆகியோரின் படங்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்புவின் படமும் இடம் பெற்றுள்ளது.

திமுக அரசின் சாதனையை குறிப்பிடும் வகையிலும், நிறைவேற்றியுள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் திமுக-வினர் போஸ்டர் ஒட்டுவது வழக்கம். ஆனால், இந்த போஸ்டரில், ‘சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என செய்து கொண்டிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் இறையன்பு அவர்களுக்கும் நன்றி’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

திமுக பிரமுகர் தம்பி ஜெயபிரகாஷ் என்பவர் ஒட்டியுள்ள கட்சி சார்ந்த ஒரு போஸ்டரில் அரசின் தலைமைச் செயலாளரின் படமும் பெயரும் இடம்பெற்றுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.