தமிழ்நாடு

விஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு : ரசாயன ஆலைக்கு சீல்

விஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு : ரசாயன ஆலைக்கு சீல்

webteam

திருப்பூரில் 4 வடமாநில இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்ததன் எதிரொலியாக சம்பவத்திற்கு காரணமான ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சாய ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் வட மாநில இளைஞர்கள் மற்றும் தமிழகர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால், ஆலையின் கழிநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணி வடமாநில இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

அப்போது, கழிநீர் தொட்டியிலிருந்து வெளிவந்த விஷவாயு தாக்கியதில் 4 வடமாநில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 4 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில்வார் உசேன், ஃபரூக் அகமது, அன்வர் உசேன் ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களில் மூன்று பேர் விஷவாயு பாதித்தவுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் 4 இளைஞர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக அந்த ஆலைக்கு வட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.