பாஜகவை விமர்சித்த அதிமுகவினருக்கு பாஜக செயலாளர் எச்சரிக்கை விடுத்த சம்பவம் தான் பரபரப்பை கிளப்பியுள்ளது...
அண்மையில் சென்னை வந்த மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக-பாஜக கூட்டணியயை உறுதி செய்தார்..மீண்டும் பாஜகஅதிமுக கூட்டணி அமைந்ததால் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிது..
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டமன்ற குணசேகரன்,
”அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது வருத்தமாக இருந்தாலும், இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது..கடந்த மக்களவைத் தேர்தலில் இதே கூட்டணி அமைந்த போது இஸ்லாமிய சகோதரர்கள் வருத்தமடைந்து வேலை செய்யமாட்டோம் என்றார்கள். முடிந்தவரை அதிமுகவுக்காக பணி செய்யுங்கள் என வலியுறுத்தினோம்.. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று என்ன செய்தது? மத உணர்வுகளை தூண்டிவிட்டு, வாக்குகளை திமுக அறுவடை செய்து கொள்கிறது” என பேசியிருந்தார்..
அடுத்தாக பேசிய திருப்பூர் மாநகராட்சி 44-வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன்,
“அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தால், அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. பொதுச் செயலாளர் திடமான கூட்டணியை உருவாக்க முன் வந்துள்ளார். என் உயிர் இருக்கும் வரை இஸ்லாமிய மக்களுக்கு துணை நிற்பேன். அதிமுக இஸ்லாமியர்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என அறிக்கை வெளியிட வேண்டும்’ என பேசிக்கொண்டிருக்கும் போதே கண் கலங்கினார்.
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே பாஜவை விமர்சித்ததாக கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாஜக செயலாளர் கார்த்திக் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆனால், வீடியோ வெளியிட்ட அடுத்த சில மணி நேரத்தில் வீடியோவை delete செய்துள்ளார் கார்த்திக்..
அந்த வீடியோவில், "முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அண்ணா உங்களுக்குதான் இந்த பதிவு..நீங்கள் எதற்கும் கவலைபட வேண்டாம்..பாஜவுடன் கூட்டணி வைத்தது தான் பிரச்னை என்று நீங்கள் கூறுவது தவறு..நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்..நீங்கள் 3 முறை ஜெயித்த வார்டுக்குள் இன்று 64 ஓட்டில் தோல்வியை சந்தித்தீர்கள்..ஆனால் பாஜக 484 ஓட்டுக்களை வாங்கியது..இதற்கு என்ன சொல்ல போறீங்க..
தயவு செய்து சொல்கிறேன் பாஜக கட்சியை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்த சம்பவம் தான் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கிய நிலையில், "முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் இருவரும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், "அதிமுக பாஜக கூட்டணி பிடிக்காதவர்கள் திட்டமிட்டு வீடியோவை பரப்பி வருகின்றனர் என்றும், பாஜக மாவட்ட செயலாளர் கார்த்தி சாதாரண தொண்டரை போல தான் பேசியுள்ளார். அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் இருக்காது என பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்..