தமிழ்நாடு

திருப்பூர்: ஆசைக்கு இணங்க மிரட்டிய நபர் - தற்கொலைக்கு முயன்ற பெண்

திருப்பூர்: ஆசைக்கு இணங்க மிரட்டிய நபர் - தற்கொலைக்கு முயன்ற பெண்

kaleelrahman

திருப்பூரில் ஆசைக்கு இணங்க வலியுறுத்தி மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா. கணவரிடம் விவாகரத்து பெற்று இவர், தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பழனி குமார் என்பவர்  அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களில் அவரின் சுயரூபம் தெரிந்து அவரை விட்டு விலகிய நிலையில், பழனி குமார் தன்னை ஆசைக்கு இணங்க மறுத்ததால் முகநூலில் அவதூறாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுதா இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு விசாரணைக்கு திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சுதா மற்றும் பழனி குமாரிடம் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.