விபரீத முடிவெடுத்த தம்பதி pt desk
தமிழ்நாடு

கடன் தொல்லை காரணமாக விபரீத முடிவெடுத்த தம்பதியர் - பல்லடம் அருகே சோகம்

பல்லடம் அருகே கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சுரேஷ்குமார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர், தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், அவர்களது மகன் சந்துரு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Tragic decision

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.