தமிழ்நாடு

திருப்பூர்: உறவினர் வீட்டிற்கு வந்த 13 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருப்பூர்: உறவினர் வீட்டிற்கு வந்த 13 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

kaleelrahman

பக்ரீத் விருந்துக்கு வந்த உறவினரின் 13 வயது மகன் எதிர்பாராதவிதமாக மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாஜகான்-மும்தாஜ் தம்பதியினரின் தங்கை முபீனா, திருப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், பக்ரீத் பண்டிகைக்கு தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது, தன் சகோதரரின் 2 மகள் மற்றும் மகன் அல்சாபித் ஆகியோரை திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் முபீனா.

இந்நிலையில் நேற்று முபீனாவின் வீட்டு மாடியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டு மாடிக்கு அருகாமையில் மிகத் தாழ்வான நிலையில் சென்றிருந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக அல்சாபித் தொட்ட நிலையில், உடனடியாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மிகக் கவலைக்கிடமானார்.

இதையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.