செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
கிருஷ்ணகிரி மாவட்டம். கந்திகுப்பம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மேரி ஸ்டெல்லா. இன்று நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக சென்னை செல்வதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து அவர், தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் மேரி ஸ்டெல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.