விக்னேஷின் உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஜமைக்கா: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு – நெல்லையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

தென் அமெரிக்கா அருகில் உள்ள ஜமைக்கா நாட்டின் அமைந்துள்ள பிராவிடன்ஸ் தீவில் லீ ஹை ரோடு என்ற இடத்தில் ஜேகே புட் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு நெல்லை டவுனை சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த சூப்பர் மார்க்கெட்டை சுரண்டையைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.

விக்னேஷ்

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணி (ஜமைக்கா நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி) அளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து உயிரிழந்தவரின் உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று விக்னேஷின் உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.