திருநெல்வேலி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 50 பேர் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.
திருநெல்வேலியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஆலோசனை கூட்டத்தின் போது சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அன்றைய தினமே பலர் வெளியேறுவதாக அறிவித்த நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சியில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.