தமிழ்நாடு

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து

webteam

திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    

இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23-ம் தேதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியதற்காக, திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 

முன்னதாக, 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம்  ரத்து செய்யப்பட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்தான நிலையில், திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில். தற்போது திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.