15 சவரன் தங்க நகையை மீட்டு ஒப்படைத்த இஸ்லாமியர் pt desk
தமிழ்நாடு

திருச்செந்தூர் | கோயில் வாசலில் கிடந்த 15 சவரன் நகையை மீட்டு நிர்வாகத்திடம் ஒப்படைத்த நபர்..!

திருச்செந்தூர் அருகே கோயில் வளாகத்தின் கீழே கிடந்த 15 சவரன் தங்க நகையை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த இஸ்லாமியரின செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

PT WEB

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீடு சுவாமி கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இதற்கிடையில் உடன்குடி சிதம்பர தெருவைச் சேர்ந்த காதர் மீரா சாகிப். ஏன்பவர் கோயில் முன்பு டீ, காபி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்று மதியம் கோயில் முன்பு வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, கோயில் வாசலில் செயின் ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். உடனே அதை எடுத்து பார்த்த போது அது தங்க நகை என்பது தெரியவந்தது. இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் அந்த தங்க நகையை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதுகுறித்து கோயில் ஒலிபெருக்கியில் அறிவிக்கபட்டது. இதையடுத்து நகையை தவறவிட்ட நபர் கோயில் நிர்வாகத்திடம் வந்து தனது நகையை பெற்றுக் கொண்டார்.

கீழே தவற விட்ட நகையை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த இஸ்லாமிய டீ வியாபாரியை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டினர்.