திருச்செந்தூர் முருகன் கோயில் pt desk
தமிழ்நாடு

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா |மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு சுற்றுப்பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

PT WEB

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெற்று வரும் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாளை அதிகாலை திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. மேற்கு கோபுரம் பகுதியில் 8 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கடந்த 1ஆம் தேதியில் இருந்து நாள்தோறும் பூஜைகள் நடந்து வருகின்றன.

மேலும் ராஜகோபுரம், வெளிப்பிரகாரம் மற்றும் கோயிலைச் சுற்றி புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 137 அடி உயரமுள்ள ராஜகோபுரம் மின் விளக்குகளால் ஜொலிக்கும் அழகை பார்த்து பக்தர்கள் சிலிர்த்து வருகின்றனர்.