2019ஆம் ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் நடைபெற்ற மது விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் முக்கிய பண்டிகைகளக்கு இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் கடைகள் நடத்தப்படுவது வழக்காக மாறிவிட்டது. இதில் தீபாவளி அன்று நடைபெறும் விற்பனை முன்கூட்டியே கணித்து, அதைவிட அதிக கோடிகளுக்கு மது விற்பனை செய்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வருமானம் ஈட்டி வருகிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நடைபெற்ற மது விற்பனை மற்ற ஆண்டுகளை முடியறிடித்து புதிய உச்சம் அடைந்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் டிசம்பர் 30ஆம் தேதி ரூ.70.34 கோடி, 31ஆம் தேதி ரூ.101.29 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 2016ல் 30ஆம் தேதி ரூ.70.58 கோடியும், 31ஆம் தேதி ரூ.112.11 கோடி விற்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டை பொறுத்தவரை 30ஆம் தேதி ரூ.90.97 கோடி, 31ஆம் தேதி ரூ.139.55 கோடி என மொத்தம் ரூ.230.52 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அண்மையில் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு தேதிகளை சேர்த்து ரூ.243 கோடிக்கு விற்கப்பட்டு மது விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு காரணம் மதுப் பிரியர்கள் தான் டாஸ்மாக் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் தமிழகம் முழுவதும் 2019 புத்தாண்டு கொண்டாட்டத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரூ.34.8 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருந்தது. ஆனால் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.36.9 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதே சமயம் சென்னையில் மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 7 பேர் பலியாகினர்.