தமிழ்நாடு

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடக்கம்?  

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடக்கம்?  

webteam

நிர்பயா கொலைக்குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தூக்கில் இடும் நபர்கள் இருவரை விரைவில் அனுப்புமாறு அம்மாநில அரசை திகார் ‌சிறை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகவலை உத்தரப்பிரதேச காவல்துறையின் கூடுதல் டிஜிபி‌ ஆனந்த் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். திகார் சிறையில் தூக்கிலிடும் ஊழியர்கள் யாரும் இல்லை என்றும் ஆனந்த் குமார் கூறியுள்ளார். 

டெல்லியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இளம் பெண் நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கடுத்து அவர்களின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள அக்ஷய் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுவை வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.