சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை 111-ஐ தாண்டியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனத்தில் வசிக்கும் சிறுத்தை, புலி ஆகியவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இனப்பெருக்கத்தை துல்லியமாக கணக்கிடவும் 350 இடங்களில் தானியங்கி கேமரா வைத்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் 111 சிறுத்தைகள் நடமாடியது தெரியவந்துள்ளது. அதில் 35 ஆண் சிறுத்தைகளும், 56 பெண் சிறுத்தைகளும் இருப்பது தெரியவந்துள்ளது. 20 சிறுத்தைகளின் பாலினம் தெளிவாக தெரியாததால், உறுதிபடுத்தப்படவில்லை.