தமிழ்நாடு

முதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

முதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

webteam

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் கப்பாக வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள் பிற ஊனுண்ணிகளின் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்வட்டம், வெளிவட்டம் என இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்வட்ட மண்டல பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி புலிகள், ஊனுண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. 

அதன்படி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய வனசரகத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 191 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 2 கேமரா வீதம் மொத்தம் 382 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்தப் பணிகள் அடுத்த 25 நாட்களுக்கு நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் புலி, சிறுத்தை, செந்நாய், கழுதைபுலி உள்ளிட்ட ஊனுண்ணிகள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பகுதிகளான சிங்கார், சீகூர் உள்ளிட்ட வனச்சரகங்களில் கேமரா பொருத்தி புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.